Thursday, June 12, 2014

குழந்தை பிர­சவம் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வ­மாக இருந்­தாலும் சரி சிசே­ரியன் பிர­ச­வ­மாக இருந்­தாலும் சரி பிர­ச­வத்­திற்கு பின்னர் சில பெண்­களுக்கு பார­தூ­ர­மான மன உள­வியல் தாக்­கங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இவை கவ­னிக்­கப்­ப­டாமல் சரி­யான சிகிச்­சைகள் கொடுக்­கப்­ப­டாமல் விட்டால் தாய்க்கும் குழந்­தைக்கும் ஆபத்­துக்கள் வரக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் நிறையவே உள்­ளன. இதனால் சில­வே­ளை­களில் தாய் தற்­கொலை செய்து கொள்­ளக்­கூ­டிய நிலை­மை­களும் சில­வே­ளை­களில் தனது குழந்­தையை கொலை செய்­து­வி­டக்­கூ­டிய நிலை­மை­களும் தோன்­றலாம். ஆகையால் இந்த முக்­கி­ய­மான பிர­ச­வத்­திற்கு பின்­ன­ரான மன உள­வியல் தாக்­கங்கள் அதன் நோய் அறி­கு­றிகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்­பாக மக்கள் அறிந்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும்.பிர­ச­வத்­திற்கு பின்னர் பெண்­களில் ஏற்­படும் மன அழுத்தம் கிட்­டத்­தட்ட 15 சத­வீ­த­மான தாய்­மார்­களுக்கு பிர­ச­வத்­திற்கு பின்னர் ஏற்­ப­டு­கின்­றன. இவை பிர­சவம் முடி­வ­டைந்து முதல் மூன்று மாதங்­களில் கூடு­த­லாக ஏற்­படும்.
 
நோய் அறி­கு­றிகள் எவை?
 
சாதா­ர­ண­மாக பெண்களுக்கு பிர­ச­வத்­திற்கு பின்னர் ஹோர்மோன் மாற்­றங்­க­ளி­னாலும் சரி­யான தூக்கம் இன்­மை­யாலும் புதிய குழந்­தை­யுடன் தமது வாழ்க்கை இசை­வாக்­கப்­படும் போது ஓர­ளவு சாதா­ரண மன நிலை­மாற்­றங்­களை அனு­ப­விப்­பார்கள். ஆனால் மிகவும் கவ­லை­யா­கவும், தம்மை குறைத்து மதிப்­பிட்டு தாழ்வு மனப்­பான்­மை­யுடையவர்களாவும் எதிலும் ஒரு விருப்­ப­மில்­லாத, எதிலும் நம்­பிக்கை இழந்­த­வ­ரா­கவும் மன­மாற்­றங்கள் கொண்­ட­வ­ரா­கவும் பல­வா­ரங்­க­ளாக இருந்­தாலும் இதனை இவ்­வா­றான நோய்க்­கு­ரிய அறி­கு­றி­க­ளாக எடுத்துக் கொள்­ளலாம். மேலும் சிலர் சொல்வார்கள் தமது புதிய குழந்­தையால் தமக்கு எந்­த­வி­த­மான சந்­தோ­ச­மோ ஆசை­யோ இல்லை என்று தமக்கு வழ­மை­யாக சந்­தோசம் தரும் விட­யங்கள் கூட தற்­போது சந்­தோ­ச­மாக இல்லை என்று கூறு­வார்கள். எதிலும் பிடிப்பின்றி இருப்பார்கள். இவ்­வா­றான நோய் அறி­கு­றிகள் இருக்கும் போது, அவர்களோடு கூட இருப்­ப­வர்கள் அதனை அவ­தா­னித்து அதற்­கான பரி­காரம் தேட முயற்­சிக்க வேண்டும். இதனை குடும்­பத்­த­வர்கள் அலட்­சி­யப்­ப­டுத்தி கால­தா­ம­த­மாகி கவ­னிக்­காமல் விட்­டார்­க­ளாயின் இறு­தியில் தாய்க்கும் குழந்­தைக்கும் ஆபத்­தான நிலை­மைகள் வரக்­கூடும்.
 
தூக்­க­மின்மை என்­பது பிர­ச­வத்­திற்கு பின்னர் பல தாய்­மார்கள் சொல்லும் விடயம். ஆனால் மன அழுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் தூக்கம் இல்­லாத பிரச்­சி­னையால் பெரிதும் அவ­திப்­ப­டு­கின்­றார்கள். அதா­வது குழந்தை தூங்கி கொண்­டி­ருக்கும் போது தமக்கு தூங்­கு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­தாலும் தூக்கம் இல்­லாமல் இருப்­பார்கள். சிலர் ஒரே தூக்கம் உள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். மேலும் சாப்­பாட்டில் விருப்பம் இல்லாத் தன்­மை­யா­கவும் பசி இல்­லா­த­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­வார்கள்.சில தாய்­மார்கள் இந்த நோயினால் அவ­திப்­ப­டும்­போது எப்போதும் மிகவும் பயந்­த­வர்­க­ளா­கவும் அமை­தி­யி­ழந்த தன்­மை­யா­கவும் அவ­திப்­ப­டு­வார்கள்.
 
வைத்­திய ஆலோ­ச­னையை எப்­பொ­ழுது நாட வேண்டும்?
 
மேற்­கு­றிப்­பிட்ட நோய் அறி­கு­றிகள் இரு வாரங்­க­ளுக்கு மேலாக நீடித்தால் நோய் அறி­கு­றிகள் தீவிரம் அடைந்­த­வாறு இருந்­தாலும் தாய் தன்னை கவ­னிக்­கா­மலும் தனது குழந்­தையை கவ­னிக்­கா­மலும் இருந்தால் அல்­லது தாய்க்கோ குழந்­தைக்கோ தீங்கு செய்­யக்­கூ­டி­ய­வா­றான எண்­ணங்கள் இருந்தால் வைத்­திய ஆலோ­சனை உட­னடி அவ­சியம்.
 
பிர­ச­வத்­திற்கு பின்னர் மன­அ­ழுத்தம் எவ்­வா­றான தாய்­மார்­களில் கூடு­த­லாக ஏற்­ப­டு­கின்­றது?
 
தாய்ப்­பாலை விட மாப்­பாலை கரைத்து குழந்­தைக்கு கொடுக்கும் தாய்­மார்கள், ஏற்­க­னவே மன அழுத்தம் உள்­ள­வர்கள், தாழ்வு மனப்­பான்­மை­யுள்­ள­வர்கள்பிர­ச­வத்தின் போது பல கடி­னங்கள் வேத­னைகள் அனு­ப­வித்­த­வர்கள், கர்ப்­பக்­கா­லத்தில் மிகவும் பயம் அச்சம் உள்­ள­வர்கள், குடும்ப அங்­கத்­த­வர்­களின் பங்­க­ளிப்பு உத­விகள் குறைந்­த­வர்கள், கணவன் மனை­விக்கு இடையில் சரி­யான புரிந்­து­ணர்வு இல்­லா­த­வர்கள், கண­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து வாழும் தாய்­மார்கள், குறைந்த குடும்ப வரு­மானம் உள்­ள­வர்கள், திட்­ட­மி­டாத கர்ப்பம் தரித்து குழந்தை பெற்­ற­வர்கள் போன்­றோரில் இப்­பி­ரச்­சினை கூடு­த­லாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது.
 
பிர­ச­வத்­திற்கு பின்­ன­ரான மன­அ­ழுத்தத் திற்கு எவ்­வாறு சிகிச்சை வழங்­கப்­படும் ?
 
பிர­ச­வத்தின் பின்னர் பிறந்த குழந்­தையை மட்டும் கவ­னித்து அதற்­கான தேவை­களை பூர்த்தி செய்­வ­துடன் நின்று விடாமல் குழந்­தையை பெற்­றெ­டுத்த தாய் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். தாயின் மன­நி­லை­களை புரிந்து கொள்ள வேண்டும். அத்­துடன் அவர்­க­ளது சாப்­பாட்டு விருப்பம் பசி, தூக்கம், சந்­தோசம், கவலை என்­பன குறித்து அறிந்த வண்ணம் இருக்க வேண்டும். அவ­ருக்கு பிரச்­சி­னைகள் இருக்கும் போது கண­வரோ மற்­றைய குடும்­பத்­தி­னரோ அந்த பெண் தனி­மையில் துன்­பப்­ப­டாமல் உத­விகள் செய்ய வேண்டும். மேற்­கு­றிப்­பிட்ட நோய் அறி­கு­றிகள் அவ­தா­னிக்­கப்­படும் போது கால­தா­ம­த­மாக்­காமல் தகுந்த மன உள­வியல் வைத்­திய நிபு­ண­ரிடம் அழைத்து சென்று அவ­ரது நிலை­மை­களை ஆராய்ந்து அதற்­கான சரி­யான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment