நான் சாகடிக்கப்படலாம்; ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்...எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனப்படும் சே
உலகம் முழுவதும் எத்தனையோ புரட்சிகள் இடம்பெற்று அவை வரலாற்றில் தடம்பதித்தாலும் புரட்சியாளன் என்றவுடன் வரலாற்றில் நீங்காது ஒலிக்கும் உன்னதமான ஒற்றை நாமத்திற்கு சொந்தக்காரர் எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனப்படும் சே என்ற மாபெரும் புரட்சியாளனே.ஓட்டுமொத்த உலகில் கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு புரட்சிகள் வேறுபட்டாலும் புரட்சியாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அனைவருக்கும் முகவரி சே என்பதே வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம்.புரட்சிகள் வெற்றியடைந்த வரலாறு உண்டு மறுமுனையில் தோல்வியடைந்த வரலாறும் உண்டு. ஆனால் புரட்சியாளன் ஒருவன் வீரமரணத்திலேயே வெற்றியடைகின்றான் என்பதற்கு வீரகாவியமாக இருப்பவன் சே என்பதை அண்டசராசரமும் ஏற்றுக்கொண்டுள்ளது.சேகுவேரா போன்ற தன்னிகரற்ற ஒரு தலைவனின் வாழ்க்கை சம்பவங்கள் ஒரு வரலாறாக இன்றும் பதியப்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் புரட்சிக்காக தனது உயிரை மாய்த்துக்கொள்வதைக்கூட துச்சமாக எண்ணி நண்பனை அரவணைப்பது போன்று வீரமரணத்தை தழுவுவதற்கு எதிர்பார்த்திருந்ததேயாகும்.
எர்னெஸ்ற்றோ சேகுவேரா என்ற இயற்பெயர் ஒரு புரட்சியாளனின் தனிப்பட்ட வீரம் அல்ல அது ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் அனைவரும் கதிகலங்கி அஞ்சி நடுங்கிய ஒரு புரட்சி அலைஇஎரிமலையின் குமுறல், அணு ஆயுதம்.ஆர்ஜென்டீனாவில் 1928 ஜூன் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சேகுவேரா மாக்சியவாதி, மருத்துவர்இ இலக்கியவாதி, யுத்தவல்லுனர், இராஜதந்திரி எனும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட புரட்சியாளன் மாத்திரமல்ல அதற்கு அப்பால் நற்பண்புகள் மிக்க மனித நேயம் கொண்ட ஒரு தன்னிகரற்ற தலைவன்.தனது இளமைக்காலத்தில் இலத்தின் அமெரிக்க தேசமெங்கும் பயணம் செய்த சே அங்கு ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் கொடுங்கோல் ஆட்சியால் அவதிப்பட்ட மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது புரட்சியை ஆரம்பித்து மெக்சிக்கோவில் கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார்.கியூபாவில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த சர்வதிகாரியான படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்க்கும் பிடல் காஸ்ட்ரோவின் எண்ணத்தை அறிந்த சே ஜுலை 26 இயக்கத்தில் தன்னையும் இணைத்து கொண்டார்.
நாடு கடந்து தேசம் கடந்து மக்களின் நலனுக்காக காஸ்ட்ரோவுடன் இணைந்து கொண்ட சேகுவேராவின் துணிச்சல் மிக்க உதவியுடனும் மக்கள் ஆதரவுடனும் படிஸ்டாவின் படையினர் படிப்படியாக முறியடிக்கப்பட்டனர்.கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவரும் சே என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கும் அளவுக்கு அவரது நாமம் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.இடதுசாரிகளின் சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைப் பாதுகாப்பு கட்டமைப்பை கியூபாவில் நிறுவும் பணிகளில் முன்னின்று உழைத்த சே உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த எகாதிபத்திய கழுகுகளின் கோரப்பார்வைக்கு இலக்காகப் போவதை அறிந்திருந்தும் தனது போராட்ட குணத்தையோ எண்ணத்தையோ கைவிட தயாராக இருக்கவில்லை.
கியூபாவின் புரட்சியின் சின்னமாக விளங்கிய காஸ்ட்ரோ வழங்கிய கியூப வங்கித்தலைவர்இ நிதி அமைச்சர் என்ற கௌரவங்களை ஏற்றுக்கொள்ளாது சேகுவேரா காக்கி உடையணிந்து அஞ்சா சிங்கமாக புரட்சி என்ற முட்பாதையில் தனது கால்களை தடம்பதித்தார்.தனது நண்பரும் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு சே எழுதிய வரிகள்: என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது. எனது மனைவிஇ மக்களுக்கு எந்தச் சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம் என்பதே.
புரட்சியை இலத்தின் அமெரிக்க தேசம் எங்கும் பரப்பும் நோக்கில் மெக்ஸிக்கோஇ கொங்கோஇ பொலிவியா என பல நாடுகளுக்கு பயணம் செய்த சேகுவேரா அங்குள்ள போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார். சேயின் வீரமும் அவரது ஆற்றலும் வரலாற்றில் அவர் செய்யப்போகும் எதிர்கால புரட்சிகளும் சி.ஐ.ஏ.யின் கழுகுக்கண்களில் சிக்கியது.யூதாஸ்இ எட்டப்பன் வழித்தோன்றல் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட சேயின் உடலை சன்னங்கள் 1967 ஆம் ஆண்டு இன்று போன்றதோர் நாளில் சல்லடையிட்டன.நான் சாகடிக்கப்படலாம்; ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன் என்ற சேயின் வார்த்தையின் மதிப்பு யாருக்கு தெரிகின்றதோ இல்லையோ உண்மையான புரட்சியாளர்களுக்கு அது விளங்கும்.
எனக்கு வேர்கள் கிடையாது கால்கள் தான். அடிமைத்தனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். என்ற சேயின் வரிகள் தீர்க்கதரிசனம். இன்றும் எங்கெல்லாம் போராட்டங்கள்இ புரட்சிகள் ஏற்படுகின்றதோ அனைத்து இடங்களிலும் சேயின் புகைப்படம் உலாவருவது அவர் இன்றும் போராட்டங்களில் கலந்துகொள்கின்றார் என்பதற்கு சான்று.உலகிற்கு இத்தகைய உண்மைகளை உணர்த்திய சே தனது பிள்ளைகளுக்கு ் வழங்கிய அறிவுரை என்ன தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில் எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால் அவர்களுக்காக வருத்தப்படுங்கள். எவ்வளவு பொதுநலம் நிறைந்த ஒரு தந்தை.ஆர்ஜன்டீனாவில் பிறந்து கீயூபாஇ மெக்ஸிக்கோஇ கொங்கோஇ பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிக்காக பாடுபட்ட சே இன்றும் புரட்சியின் முகவரியாய் மக்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார்
No comments:
Post a Comment